கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம், வரும் மே 24-ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதால், அம்மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் வரும் மே 10-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை, இந்திய தேர்தல் ஆணையம், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில், அதிமுகவும் போட்டியிட இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கோலார், பெங்களூர் நகர் ஆகிய பகுதிகளில், 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட, பாஜக-விடம் அதிமுக விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கோலார், பெங்களூர் நகர் ஆகிய பகுதிகளில், அதிமுக கட்சி நல்ல செல்வாக்கை பெற்றிருப்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.