வாரிசு பட பிரச்சனைக்கு உதயநிதி தான் காரணமா?

விஜயின் வாரிசு திரைப்படம், தெலுங்கு மொழியில் வெளியாவதற்கு, சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை பெரும் பேசுபொருளாக மாறிய நிலையில், சீமான், லிங்குசாமி உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், வாரிசு படப் பிரச்சனைக்கு, உதயநிதி தான் காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதாவது, வாரிசு படத்தின் தெலுங்கு வெளியீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு உதயநிதி தான் காரணம் என்றும், தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் மட்டுமே திரைப்படங்களை வெளியிட முடியும் என்கிற நிலை உள்ளது என்றும், கூறியுள்ளார். இந்த தகவல், திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.