ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம் – உளறிக்கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

இதையடுத்து திண்டுக்கல் நாகல் நகரில் இன்று ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம் என உளறி கொட்டினார். இதனை அருகில் இருந்த கட்சிக்காரர்கள் அவரிடம் எடுத்துச் சொல்லவே பின்னர் மீண்டும் சுதாரித்துக் கொண்டு மீண்டும் பேசுகையில் நான் மாற்றி சொல்லி விட்டேன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்குவோம் என கூறினார்.

RELATED ARTICLES

Recent News