“யார் அந்த சார்” – விவாதம் நடத்த வலியுறுத்தி அதிமுக MLA-க்கள் போராட்டம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த மாணவி, சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஞானசேகரன் என்ற நபரை கைது செய்தனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்டு புதிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே, அதிமுக, பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என்று பல்வேறு அரசியல் கட்சியனர், இந்த சம்பவத்தை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர், இன்று தொடங்கி, நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு வந்த எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள், அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தினர்.

மேலும், ‘யார் அந்த சார்?’ எனவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் எனவும், அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இதுமட்டுமின்றி, சட்டமன்ற வளாகத்தில், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News