2025-ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத் தொடர், கடந்த திங்கள் கிழமை அன்று தொடங்கியது. அப்போது, அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், ‘யார் அந்த சார்’ என்ற ஸ்டிக்கரை, தங்களது சட்டைகளில் குத்திக் கொண்டு, சட்டசபைக்கு வருகை தந்திருந்தனர்.
இதையடுத்து, சட்டசபையில் இருந்து வெளியேறி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து, விவாதம் நடத்த வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், சட்டசபை கூட்டத் தொடரின் 3-வது நாளான இன்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது.
இவ்வாறு இருக்க, அதிமுக எம்.எல்.ஏ-க்கள், கருப்பு சட்டை அணிந்துக் கொண்டு, சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.