பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதா இந்துத்வா சிந்தனைகளுடன் செயல்பட்டதாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சாதி, மத பேதமின்றி மக்களுக்கு தொண்டாற்றிய தலைவியை பாஜக திட்டமிட்டு மதசாயம் பூசுவதாக தற்போதைய அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் என்பதை நிரூபிக்க தயார் என கூறிய அண்ணாமலை அதிமுகவினர் விவாதத்திற்கு தயாரா என அறைக்கூவல் விடுத்தார்.
இந்நிலையில் அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மதங்களையும் தன் வாழ்நாள் முழுவதும் மதித்து வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி அவதூறு பரப்பும் அரைவேக்காடு அண்ணாமலையை கண்டிக்கிறோம்” என வாசகங்களை அடித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.