சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் மனு அளித்த பின் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னைப்பற்றி அவதூறு பரப்பப்படுகிறது. எனக்கு மிரட்டல் கால் அதிகமாக வருகிறது. இறுதியில் புகழேந்தி இறந்து விட்டார் என செய்தியை பரப்ப தொடங்கியுள்ளனர். தகுந்த ஆதரங்களை டிஜிபி அலுவலகத்தில் வழங்கியுள்ளேன்.
ஆதாரத்துடன் கொடுத்திருப்பதால் 24 மணி நேரத்தில் கைதாவர்கள் என நம்புகிறேன். எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி இப்படி நடந்து கொள்வார் என நினைத்து பார்க்கவில்லை. ஓ.பி.எஸ் -ஐ கண்டவாறு திட்டி பதிவு போடுகின்றனர்.
தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினோம். தமிழ் மகன் உசேன் ஒரு சார்பாக நடந்து கொண்டார். அதனால் வேட்பாளரை திரும்ப பெற்றோம். இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கிவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு தேவையில்லாத வேலையை செய்து வருகிறார்கள்.
ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் வாங்குவாரா என்று பார்க்கலாம். தேர்தல் முடிவு வரும் போது டெபாசிட் ஐ கூட வாங்க முடியாவிட்டால் கட்சியை ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்க வேண்டும்.
பாஜக மீது மரியாதை வைத்திருக்கிறோம், அதற்காக அண்ணாமலை சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது. அண்ணாமலையை கர்நாடகாவிலிருந்து பார்த்து வருகிறேன். அவரை விட எனக்கு அனுபவம் உண்டு என தெரிவித்தார்.