அண்ணாமலை வாய் கொழுப்புடன் பேசுகிறார். அவருக்கு வாய் அடக்கம் தேவை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக – பாஜக இடையில் நடைபெற்று வரும் வார்த்தைப் போர் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு ”பாஜகவுக்கு சகிப்புத்தன்மை இல்லை. அதிமுக, திமுகவில் இருந்து பாஜகவில் யார் வேண்டும் என்றாலும் இணையலாம். ஆனால் பாஜகவில் இருந்து யாரும் மற்ற கட்சியில் இணையக் கூடாதா? என கேள்வி எழுப்பினர்.
ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது சகஜம் தான். அதிமுகவிலிருந்து பாஜகவில் சேர்ந்த போது இனித்தது. இப்பொது பாஜகவிலிருந்து அதிமுகவில் சேரும் போது கசக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
‘பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும். வாய் அடக்கம் தேவை. வாய் கொழுப்புடன் பேசக் கூடாது. மத்தியில் ஆளுகின்றோம் என்ற திமிருடன் பேசக் கூடாது. அண்ணாமலை வாய் கொழுப்புடன் பேசுகிறார் என தெரிவித்தார்.