3 மாநில தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு உட்பட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 8ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற பிப்ரவரி 10ஆம் தேதி இகடைசி நாள். 27ம் தேதி வாக்குபதிவுக்கு பின் மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புகள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பி படிவ விண்ணப்பத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடுவார்களா? என கேள்வி எழுந்துள்ளது.
கையெழுத்து போடாமல் இரு தரப்பும் தனித்து போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படலாம் என கூறப்படுகிறது.