திமுக தலைமையிலான ஆட்சியில், கடந்த 4 வருடங்களாக, அப்பாவு சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இவர் இந்த பதவியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி துணைத் தலைவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு, இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள் உட்பட 154 எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அதிமுக எம்.எல்.ஏ-கள் 66 பேர் ஆதரவு தெரிவித்தனர்.
பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், இந்த ஆதரவு, எதிர்ப்பு என்று எதுவும் தெரிவிக்காமல், வெளிநடப்பு செய்துவிட்டனர். இதன் அடிப்படையில், அதிமுக கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதையடுத்து, அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். குரல் வாக்கெடுப்பு, டிவிஷன் ஆகிய இரண்டு முறைகளிலும், அதிமுகவின் தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.