பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அக்கட்சியின் புதிய மாநில தலைவராக பி.ஆனந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2006-ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து செயல்பட்டு வந்த ஆனந்தன் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.