Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

“கோவேக்ஸின் செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆபத்தா?” – என்ன நடக்கிறது? புதிய ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

உலகம்

“கோவேக்ஸின் செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆபத்தா?” – என்ன நடக்கிறது? புதிய ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

கொரோனா வைரஸ்-க்கு எதிராக கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை அஸ்ட்ரா ஜெனேக்கா என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த தடுப்பூசியின் 175 கோடி டோஸ்கள், இந்தியாவில் மட்டும் பொதுமக்களுக்கு போடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு, மிகவும் அரிதாக ரத்தம் உறைதல் பிரச்சனை மற்றும் பிலேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைதல் பிரச்சனை ஏற்படுவதாக, அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

இதற்கிடையே, தன்னுடைய தடுப்பூசிகள் அனைத்தையும் அந்நிறுவனம் திரும்ப பெற்றிருந்தது. இதனால், கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் கடும் அச்சத்திலும், கோவேக்ஷின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் நிம்மதியாகவும் இருந்தனர்.

ஆனால், அவர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், தற்போது புதிய ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. அதாவது, SpringerLink என்ற மருத்துவ இதழில், பாரத் பயோடெக் உருவாக்கிய கோவேக்ஷின் தடுப்பூசி குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மக்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மூன்றில் ஒருவருக்கு, பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இளம் பருவத்தை சேர்ந்த பெண்கள் மற்றும், அலர்ஜி கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.

டாக்டர் சங்க சுப்ரா சக்கரபர்த்தி மற்றும் அவரது அணியினர் சேர்ந்து, பனாராஸ் இந்து பல்கலைக்கழத்தில், இந்த ஆய்வை நடத்தியுள்ளது. ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்களை ஒரு வருடமாக கண்காணித்ததில், பெரும்பான்மையானவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும்?

இந்த ஆய்வில், ஆயிரத்து 24 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், 635 இளம் பருவத்தினரும், 291 பேர் நடுத்தர வயது கொண்டவர்களும், ஒரு வருட காலமாக கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

இதில், சுவாசக் குழாய் தொற்றால், 304 இளம் பருவத்தினரும், 124 நடுத்தர வயதுக் கொண்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இளம் பருவத்தினரில், தோல் சம்பந்தப்பட்ட நோயில் 10.5 சதவீதமும், பொதுவான பிரச்சனைகளில் 10.2 சதவீதம் பேரும், நரம்பு சம்பந்தமான பிரச்சகைளில் 4.7 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட நபர்களில், இளம்பருவத்தினர், பெண்கள், அலர்ஜி நோயால் இதற்கு பாதிக்கப்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பக்க விளைவுகள் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரே சமயத்தில் பல்வேறு உடல் சம்பந்தமான பிரச்சனைகளை கொண்ட நடுத்தர வயது கொண்டவர்களுக்கு, பாதிப்பு ஏற்பட இரண்டு மடங்கு வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

More in உலகம்

To Top