Connect with us

Raj News Tamil

விஜய், விஷாலை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்..!!

சினிமா

விஜய், விஷாலை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்..!!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. ஜெயிலர் படத்தை அடுத்து ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கணிசமான சம்பளமும் பேசப்பட்டது. ஆனால் விக்ரம் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன், தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். அடுத்ததாக ரஜினி படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top