தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவரது தந்தை சுப்ரமணியம் கடந்த 24-ஆம் தேதியன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் அஜித்குமார் தந்தை மறைவிற்கு இன்று நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்தனர். இருவரும் ஒன்றாக காரில் அஜித் வீட்டிற்குள் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.