மீண்டும் ஒரு தர்மயுத்தமா..! ஜெ நினைவிடம் அழைக்கிறார் ஓபிஎஸ்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத்தொடர்ந்து, அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 2016-ல் இணைந்து செயல்பட்டு வந்த இவர்கள், ஒற்றைத்தலைமை விவகாரத்தில், மீண்டும் இருவரும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெ.நினைவு தினமான டிசம்பர் 5-ல், தனது ஆதரவாளர்களை,ஊர்வலமாக செல்ல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துத்துள்ளார். பின்னர் மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, உறுதி மொழி எடுத்துக்கொள்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.