Connect with us

Raj News Tamil

மீண்டுமா.. வெங்காயம் விலை உயர்வு!

இந்தியா

மீண்டுமா.. வெங்காயம் விலை உயர்வு!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை உயர்ந்து சாமனிய மக்களை வாட்டி வதைத்தது. இப்போது வெங்காய விலை உயர்வு சாமனிய மக்கள் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

டெல்லியில் நேற்று 5 கிலோ வெங்காயம் ரூ.300க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.350க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து வரத்து குறைவாக இருப்பதால் விலை ஏறி வருகிறது.

சில்லறை வியாபாரி ஒருவர் கூறுகையில், “மொத்தமாக இங்கிருந்து வெங்காயம் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்வோம். நவராத்திரிக்கு முன்னாள் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50க்கு விற்றது. இன்று ரூ.70க்கு விற்கிறது நாங்கள் இதை கடைகளில் ரூ.80க்கு விற்பனை செய்கிறோம். இதே நிலை தொடர்ந்தால் விரைவில் கிலோ ரூ.100-ஐ எட்டும். தக்காளி விலையும் இப்போது ஏறத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.20க்கு விற்ற தக்காளி இன்று கிலோ ரூ.40 ஆக அதிகரித்துள்ளது” என்றார்.

More in இந்தியா

To Top