ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி-ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் கடந்த 10 ம் தேதி வெளியான திரைப்படம் அகிலன். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் வரும் 31-ம் தேதி ஜீ-5 தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.