Connect with us

Raj News Tamil

ராணுவ வீரர் தற்கொலை.. ராணுவ மரியாதை கிடையாது – இந்திய ராணுவம்

இந்தியா

ராணுவ வீரர் தற்கொலை.. ராணுவ மரியாதை கிடையாது – இந்திய ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள ராஜோரி பகுதியில், அம்ரித் பால் சிங் என்ற ராணுவ வீரர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து, தன்னைத் தானே சுட்டு, தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த சம்பவம், அங்கிருந்தோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையே, அந்த ராணுவ வீரரின் இறுதி சடங்கின்போது, ராணுவ மரியாதை செலுத்தப்பட மாட்டாது என்று ராணுவ அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டது.

இதனை அறிந்த சில நெட்டிசன்கள், அக்னிபாத் திட்டத்தின் மூலம் இவர் ராணுவத்தில் இணைந்ததால் தான், இவருக்கு ராணுவ மரியாதை வழங்கப்படவில்லை என்று செய்தியை பரப்பி வந்தனர்.

இந்த செய்தி, ராணுவத்தின் கவனத்திற்கு சென்றதையடுத்து, அவர்கள் அதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி, ராணுவத்தின் விதிமுறைகளின் படி, ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டால், அவருக்கு ராணுவ மரியாதை வழங்கப்படாது.

இதற்கும், அக்னிபாத் திட்டத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அக்னிபாத் திட்டத்திற்கு முன் ராணுவத்தில் சேர்ந்த வீரர்களுக்கும் இதுதான் விதிமுறை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அம்ரித் பால் சிங் உயிரிழந்தது, அவரது குடும்பத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் பெரிய இழப்பு என்றும், மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு, அம்ரீத் சிங்கின் உடல், அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், கூறப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top