மத்தியில் ஆளும் பாஜக கட்சி, அக்னி வீரர் என்ற திட்டத்தை அன்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த திட்டத்தின் மூலம், இந்திய ராணுவத்தில் இணையும் வீரர்களுக்கு, சில விதிமுறைகள் வகுக்கப்பட்டது.
அந்த விதிமுறைகளின் படி, பென்ஷன் கிடையாது, மற்ற ராணுவ வீரர்களுக்கான சலுகைகள் கிடையாது, இந்த முறையின் மூலம் ராணுவத்தில் சேருபவர்கள் 4 வருடங்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள் என்று கூறப்பட்டது.
இந்த திட்டம், எதிர்கட்சியினர் தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அக்னிவீரர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்த வீரர், சமீபத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து, காங்கிரஸ் கட்சி தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.
அதாவது, ராகுல் காந்தி கூறியதாவது,
“சியாச்சின் என்ற பகுதியில், கவேத் அக்ஷய் லக்ஷமன் என்ற அக்னிவீரர் உயிரிழந்தார். இவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை கூறிக் கொள்கிறேன். ஒரு இளம்வீரர் நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார்.
ஆனால், அவருக்கு கருணைத் தொகை கிடையாது, எந்தவொரு ராணுவ சலுகையும் கிடையாது.
அந்த வீரரின் இறப்புக்கு பிறகு, அவரது குடும்பத்தினருக்கு பென்ஷனும் கிடையாது. நம் இந்திய நாட்டின் ஹீரோக்களை அவமானப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டம் திட்டம் தான் இந்த அக்னிபாத்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராணுவ வீரர்கள் துறையின் தலைவர் ரோஷித் சௌத்ரி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அக்னிபாத் திட்டம் அதிகமான குறைபாடுகளை கொண்டுள்ளது. ஏனென்றால், இந்த திட்டத்தின் மூலம் பணியில் சேர்பவர்களுக்கு, மற்ற வீரர்களை காட்டிலும், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.