மக்களவை தேர்தலுக்கான அதிமுக 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
நேற்று 16 தொகுதிகளுக்கான முதல் கட்டம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன் விவரம் வருமாறு:
கோவை – சிங்கை ராமச்சந்திரன்
திருச்சி – கருப்பையா
பெரம்பலூர் – சந்திரமோகன்
மயிலாடுதுறை – பாபு
ஸ்ரீபெரும்புதூர் – பிரேம் குமார்
தருமபுரி – அசோகன்
திருப்பூர் – அருணாசலம்
நீலகிரி – லோகேஷ்
வேலூர் – பசுபதி
திருவண்ணாமலை – கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி – குமரகுரு
சிவகங்கை – சேகர் தாஸ்
நெல்லை – சிம்லா முத்துச்சோழன்
தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
கன்னியாகுமரி – பசிலியா நசரேத்
புதுச்சேரி – தமிழ்வேந்தன்
ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.