அதிமுகவினர் சட்டப்பேரவையில் பங்கேற்க ஒருநாள் தடை!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை நடவடிக்கைகளிலிருந்து இன்று ஒரு நாள் தடை விதித்து அவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டபேரவை கூடியதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் முதல்வர் பதவி விலக வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து பேசிய பேரவை தலைவர் சட்டமன்ற உறுப்பினர்கள் அவை மாண்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கேள்வி நேரம் முடிந்ததும் வாய்பளிப்பதாகவும் கூறினார்.

இதனை ஏற்க மறுத்து தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி வந்தனர்.

குறுகிட்டு பேசிய பேரவை தலைவர், இது ஒன்றும் பொது கூட்டம் கிடையாது சபை காவலர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பேரவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.

அமைச்சர் கே என் நேரு, பேரவை விதி 121 ( 2 ) ன் படி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டத்தொடர் முழுவதுமாக சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் :- கூட்டத்தொடர் முழுவதும் வேண்டாம் இன்று ஒரு நாள் மட்டும் போதும் மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும். என கோரினார். அடிப்படையில்

தொடர்ந்து பேசிய பேரவை தலைவர், அவைக்கு குந்தகம் விளைவித்ததால் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்ய இருந்ததை முதல்வர் பெருந்தன்மையோடு ஒரு நாள் மட்டும் போதும் என கோரியதன் அடிப்படையில் இன்று ஒரு நாள் முழுவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்க்க கூடாது என தீர்மானம் பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றபட்டது.

RELATED ARTICLES

Recent News