முறிந்தது அதிமுக – பாஜக கூட்டணி…..அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிமுக தலைமையை கோபம் அடையச் செய்தது.

இதனையடுத்து அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தொடர்ந்து அண்ணாமலையின் பேச்சுக்களுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவித்தார். ஆனால் அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக இன்று முதல் பாஜகவில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி கொள்வதாக அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News