ஈரோட்டில் பணநாயகம் வென்றது – புலம்பிக்கொண்டே வெளியேறிய அதிமுக வேட்பாளர்..!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 32,506 வாக்குகளும், அதிமுக 11,219 வாக்குகளும் பெற்றிருந்தன. அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சுமார் 21,287 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து விறுவிறுவென வெளியேறினார். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் “ஜனநாயகம் தோற்றுவிட்டது, பணநாயகம் வென்றது” எனக் கூறிவிட்டு மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து கிளம்பினார்.