மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்னர் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்;-
*கவர்னரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்.
*உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
*குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
*தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.
*தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
*சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்
*நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறையை கொண்டுவர வலியுறுத்தப்படும்.
*வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும்.
*மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வேலை நாட்கள் 150 நாட்களாக அதிகரிக்கவும், தின ஊதியம் ரூபாய் 450 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும் என மத்திய அரசை போதுமான அளவு நிதியை ஒதுக்க வலியுறுத்துவோம்.
*கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து தர மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*சென்னை முதல் மதுரை வரை ஆறு வழிச் சாலையாக உயர்த்த வலியுறுத்துவோம்.
*ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவோம்.
*பெண்களுக்கு மகளிர் உரிமைத் உரிமைத் தொகை மாதம் 3000 ரூபாய் வழங்குவோம்.
*குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.