தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் அதிமுகவின் தலைமை அலுவலமான எம்.ஜி.ஆர் மளிகை நடைபெற்றது.
அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.
திமுகவின் B டீமாக உள்ள ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர மற்ற நபர்கள் கட்சியில் சேர விரும்பினால் சேர்த்து கொள்வோம். ஒவ்வொரு தொண்டனும் மகிழ்சியாக ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறோம்.
அதிமுகவை பொறுத்தவரை இன்னும் 100 ஆண்டுகள் தலைத்து ஓங்கும் என்றார். உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளர் என உறுதி செய்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்றார்.

கழகத்தை அழித்து விட வேண்டும் என திமுகவுடன் கைகோர்த்த ஓபிஎஸ் இன்று அடையாளம் தெரியாத நபராக மக்களால் கைவிடப்பட்ட நபராக உள்ளார். அதிமுக கூட்டணி கட்சி மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு ஈரோடு கிழக்குத் தேர்தலில் வெற்றி பெறும் என்றார்.
தேர்தல் ஆணையம் வழக்கு இருந்ததால் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை மாற்றாமல் இருந்தனர். தற்போது தீர்ப்பு வந்துள்ளதால் இதனை மாற்ற மீண்டும் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்த உள்ளோம் என்றார்.
இடைக்கால பொதுசெயலாளர் தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என்றும் அதிமுக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவீந்திரநாத்துக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தெரிவித்தார்.
ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி.யாக இருந்தாலும், அவருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை. இது குறித்து மக்களவைக்கு கட்சி சார்பில் தெரிவிப்போம் எனவும் அத்தோடு உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக அளித்துள்ள தீர்ப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவை பலவீனப்படுத்தும் என டிடிவி தினகரன் சொல்லியுள்ள கருத்துக்கு, அவர் என்ன சட்ட வல்லுனரா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.