மார்ச் 26ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் – வெளியான அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 20 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். 21 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெறலாம். 27ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.