சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயம் செயல்பட்டு வருகிறது இங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அண்ணா அறிவாலயம் அருகில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை தூக்கி அறிவாலய வளாகத்தில் வீசினார்.
இதில் பீர் பாட்டில் வெடித்து சிதறியது பின்னர் ஓடமுயன்ற வாலிபரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் துரைப்பாக்கத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகி கோவர்தன் என்பது தெரியவந்தது. மேலும் மது போதையில் பீர் பாட்டிலை வீசிய அவரை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.