கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிகரலப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுக வை சேர்ந்த பார்த்திபன்.
அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் எதிர் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசுக்கு சொந்தமான இடங்களில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டது.
அவ்வாறு வரையப்பட்ட சுவர் விளம்பரங்களை ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கண்டித்து உள்ளார். ஆனாலும் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டது. இன்று அவரின் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் வரையப்பட்ட ஜெயலலிதாவின் உருவப் படத்தினை வெள்ளை அடித்து அழித்தனர்.
இதனை கண்டித்து அப்பகுதியில் உள்ள அதிமுகவினர் ஊராட்சி மன்ற தலைவரின் இந்தப் போக்கு அராஜக செயலாகும் என்று இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபனுக்கும் அதிமுக வினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக வினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைத்தனர்.