வெளிநடப்பு செய்ய முயன்ற அதிமுக MLA-க்கள் – சமாதானம் செய்த திமுக அமைச்சர்

மதுரையில் நிதியமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்திலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வெளிநடப்பு செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய 10 கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மதுரையில் நடைபெற்றது, இதில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழநிவேல் தியாகராஜன், மூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட எம்எல்ஏ-கள் கலந்து கொண்டனர்.

அப்போது கடந்த அதிமுக ஆட்சியை ஒப்பிட்டு தற்போது அனைத்தும் சிறப்பாக நடப்பதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழநிவேல் தியாகராஜன் கூறியதை கண்டித்து, அதிமுக-வினர் வெளிநடப்பு செய்ய முயன்றனர். அவர்கள் அமைச்சர் மூர்த்தி சமாதானப்படுத்தினார்.

கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, எதற்கெடுத்தாலும் குழு அமைப்போம் என்று மட்டும் சொல்வதாக குற்றம்சாட்டினார். நிதி ஒதுக்கீடு செய்யாமல் எம்எல்ஏ-களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி என்ன செய்யப்போகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.