ஏப்ரல் 19-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.
இதையடுத்து, அதிமுக – தேமுதிகவுடனான தொகுதி பங்கீட்டை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு பாமக எம்எல்ஏ அருள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமினுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை இன்று அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்திக்கின்றனர்.