தமிழக அரசு உயர்த்தியசொத்து வரி உயர்வு,மின் கட்டண உயர்வு,பால் விலை உயர்வை கண்டித்து காரமடையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வு,மின்கட்டன உயர்வு,பால் உயர்வை கண்டித்தும் கோவை மாவட்டம் காரமடையில் ஒன்றிய கழக செயலாளர்கள் ராஜ்குமார்.ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் பேசிய சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து,மகளிர் உரிமை தொகை ரூ,1000 சமையல் சிலிண்டர் எரிவாயு மானியம் ரூ.100,கல்விக்கடன் தள்ளுபடி போன்றவற்றை சுட்டி காட்டி ஆர்பாட்டத்தில் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசு மக்கள் மீது சொத்து வரி உயர்வு ,பால் விலை உயர்வு , மின்கட்டண உயர்வு என அடுக்கடுக்கான வரி விதிப்பினை தினிப்பதாக குற்றம் சாட்டினர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.