புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் அதிமுக..!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி, வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

இதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக. காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர் கட்சிகள் அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் அதிமுக சார்பில் எம்.பி.க்கள் தப்பிதுரை, சி.வி.சண்முகம் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News