விழுப்புரத்தில் அதிமுகவை விமர்சனம் செய்யும் வகையில் “இலவு காக்கும் கிளி” என அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி போஸ்டர் ஒட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக அதிமுக காத்திருப்பதை விமர்சனம் செய்யும் வகையில் இலவு காக்கும் கிளி என வடிவேலு நகைச்சுவை பாணியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் தகுதியான கட்சி, சின்னம் தகுதியானவர்களிடம் இருந்தால்தான் மதிப்பு. என வாசகம் எழுதப்பட்டுள்ளது.