மெரினாவில் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சி: சாரை சாரையாக வருகை தரும் பொதுமக்கள்!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவையொட்டி வான்படை சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

21 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் விமானப்படையின் வான்படை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய விமானப்படையின் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் உள்ளிட்ட முக்கிய இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த வான்படை சாகச நிகழ்ச்சியில் 72 வகையான விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில், காமராஜர் சாலையில் மக்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறல் வருகின்றனர்.

பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை யெடுத்து தடுப்புகளை மீறி பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

RELATED ARTICLES

Recent News