டெல்லியில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு, ஏர் இந்தியா விமானம் ஒன்று சென்றுள்ளது. இந்த விமானத்தில், துஷார் மசந்த் என்ற பயணி பயணித்துள்ளார். மது போதையில் இருந்த இவர், தனது சக பயணியின் மீது, திடீரென்று சிறுநீர் கழித்துள்ளார்.
துஷார் மசந்தின் இந்த நடவடிக்கை குறித்து அறிந்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், அவர் தனது ஒத்துக் கொண்டு, சக பயணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதையடுத்து, அதிகாரிகள் சிறுநீர் கழித்த நபரை எச்சரித்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.