பலத்த அடி வாங்கிய ஏர் இந்தியா – இதுவரை எந்த நிறுவனத்திற்கும் இப்படி நடந்தது இல்லை? என்ன நடந்தது?

அமெரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அதில், ஏறிய மூதாட்டி ஒருவர் மீது, ஆண் ஒருவர் சிறுநீர் கழித்தார். இதனைக் கண்ட சக பயணிகள், அந்த ஆணை வன்மையாக கண்டித்தனர். இந்த சம்பவம், ஊடக வெளிச்சத்திற்கு வந்த பிறகு, சமூக வலைதளங்களிலும், கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென்றால், பிரச்சனைகளை கையாள்வதில், ஏர் இந்தியா நிறுவனம் நிலைமையை முறையாக கையாளவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதுவரை எந்த விமான நிறுவனத்திற்கும் இந்த அளவுக்கு அபராத தொகை விதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, தலைமை விமானியின் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதோடு, ஏர் இந்தியாவின் விமான சேவை இயக்குநருக்கு ரூபாய் லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News