சென்னையில் போகிப் பண்டிகை ஒட்டி கடும் புகை மூட்டத்தால் விமான சேவை பாதிப்படைந்துள்ளது.
சிங்கப்பூர் லண்டன் இலங்கை டெல்லி ஆகிய 4 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
அதோடு மஸ்கட், துபாய், குவைத், மும்பை,ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட 20 வருகை விமானங்கள், மேலும் துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், லண்டன், மும்பை, டெல்லி, அந்தமான், தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட 24 புறப்பாடு விமானங்கள், புகைமூட்டம் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காலை 9 மணிக்கு மேல் விமான சேவை சீரடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று காலை 9.25 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஸ்பைஜெட் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இதுவரையில் சென்னை விமான நிலையத்தில் வருகை புறப்பாடு விமானங்கள் சுமார் 44 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.