சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தேனாம்பேட்டை காவல்துறையில் புகார் அளித்தார். அதில், தன்னுடைய வீட்டில் இருந்து 60 சவரன் நகைகள் திருடுப்போயுள்ளதாகவும், தன் வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மீது தான் சந்தேகமாக உள்ளது என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து, ஊழியர்கள் 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ஈஸ்வரி என்ற ஊழியர் தான், நகையை திருடியிருப்பது தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது அவர் அளித்து வாக்குமூலத்தில், பகீர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, “நான் திருடியதற்கு காரணமே, ஐஸ்வர்யா தான். என்னை மாடுபோல் வேலை வாங்கிய அவர், வெறும் 30 ஆயிரம் ரூபாயை மட்டுமே சம்பளமாக வழங்கியுள்ளார்.
அவருக்கு இருக்கும் வசதிக்கு, எனக்கு இன்னும் அதிகமாகவே சம்பளம் கொடுத்திருக்கலாம். இந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு, என்னால் குடும்பத்தை நடத்த முடியவில்லை.
எனவே, தான் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து திருட தொடங்கினேன். ஆரம்பத்தில் குறைவான அளவிலேயே திருடினேன். இதனால், அவர்களால் நான் செய்த திருட்டை கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து, தொடர்ந்து திருடி வந்தேன்” என்று கூறியுள்ளார்.