தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர், மும்பை நகரில் உள்ள ஜுகு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராயின் சொகுசு காரை, மாநகர பேருந்து, இடித்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில், காரில் பயணித்த யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. சொகுசு காரின் பின்பக்கம் மட்டும் லேசாக சேதம் அடைந்துள்ளதாம். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடைபெற்றபோது, நடிகை ஐஸ்வர்யா ராய் காரில் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.