தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழிகளில் நடித்துள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராய். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை திருமணம் செய்துக் கொண்டுள்ள இவருக்கு, ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார்.
எந்த விருது விழாக்களுக்கு சென்றாலும், பொது நிகழ்ச்சிக்கு சென்றாலும், தனது மகளை, ஐஸ்வர்ய ராய் தன்னுடன் அழைத்து செல்கிறார். இதனால், தாயை போலவே, ஆராத்யா பச்சனும், பிரபலமாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஆராத்யா பச்சனின் பள்ளிக் கட்டணம் தொடர்பான தகவல் வெளியாகி, நெட்டிசன்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது, மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் தான், ஆராத்யா படித்து வருகிறார்.
இந்த பள்ளியில், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 9.65 லட்சம் ரூபாய், கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.