லேடி சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. ஊர் குருவி, குழாங்கல் உள்ளிட்ட படத்தில் நடித்துவரும் இவர், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார். ஆனால் இவரது நடிப்பில் வெளியான படங்கள் இந்த ஆண்டில் சரிவர போகவில்லை,மேலும் கடைசியாக வெளியான கனெக்ட் திரைப்படமும் பெரிதளவில் வசூலிக்கவில்லை. இந்த நிலையில் நயந்தாராவின் இடத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷால் ஆபத்து வந்துள்ளது என திரைவட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது. அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எந்த படமாக இருந்தால் தயங்காமல், மற்ற ஹீரோயின்கள் பயப்படும் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் உருவான ஃபர்ஹானா, தி கிரேட் இண்டியன் கிட்ச்சன், ஜமுனா என ஒரே வாரத்தில் மட்டும் 3-படங்கள் வெளியாக உள்ளது. ஆகேவே தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் பிடிப்பார் என்று திரைத்துறையினர் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.