“நீயா நானா” – ஐஸ்வர்யாவுடன் போட்டி போடும் தனுஷ்!

தனுஷ்-ம், ஐஸ்வர்யாவும் பிரிந்த பிறகு, தங்களது பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஆல்பம் சாங்கை இயக்கி முடித்துவிட்டு, புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

இதில், நடிகர் விஷ்னு விஷாலும், விக்ராந்தும் இணைந்து நடிக்க உள்ளனர். நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதன்பிறகு, தனது இரண்டாவது படத்தை இயக்க உள்ளதாகவும், இதற்கு பின்னணி வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும், கூறப்படுகிறது.

மேலும், தனுஷ் இயக்க இருக்கும் படத்திலும், விஷ்னு விஷால் தான் நடிக்க இருக்கிறார் என்று தற்போது தெரியவந்துள்ளது. இருவரும் ஒரே ஹீரோவுடன் இணைய இருப்பதாக வெளியான தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.