பொன்னியின் செல்வனுக்கு டஃப் கொடுக்கும் அஜித்!

அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதன்பிறகு, ஒன்றரை வருடங்கள் பிரேக் எடுத்துவிட்டு, மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளாராம். அந்த திரைப்படத்தை, அஜித்தின் பேவரைட் இயக்குநரான விஷ்ணுவர்தன் இயக்க இருக்கிறாராம்.

வரலாற்று பின்னணியை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக உள்ளதாம். பொன்னியின் செல்வனை போன்று, மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.