“Don’t Touch Me” – யோகிபாபு மனதை நோகடித்த அஜித்? என்ன நடந்தது?

சினிமா பாத்திரிக்கையாளர்களான பிஸ்மி, அந்தணன், சக்திவேல் ஆகிய 3 பேரும், Youtube சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த சேனலில், பல்வேறு Exclusive-ஆன சினிமா செய்திகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று வெளியிட்ட வீடியோவில், நடிகர் யோகிபாபுவை, சரமாரியாக அவர்கள் விமர்சித்துள்ளனர். இதற்கிடையே, அந்த வீடியோவில், அஜித் குறித்து, யோகிபாபு கூறியதாக சொல்லப்படும், தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளனர்.

அதாவது, சினிமா படப்பிடிப்பின்போது, “Don’t touch me” என்று யோகிபாபுவை, அஜித் அவமானப்படுத்தியுள்ளாராம். இந்த தகவலை, பிஸ்மியிடம் கூறி, யோகிபாபுவும் வருத்தம் அடைந்துள்ளாராம்.

இதுதொடர்பான செய்தியை, பல நாட்களுக்கு முன்பே கூறிய பிஸ்மி, அந்த சமயத்தில், அஜித்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் இருந்துள்ளார்.

ஆனால், தற்போது, அந்த நடிகர் அஜித் தான் என்பதை, வெளிப்படையாகவே, அவர்கள் தெரிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News