அஜித்-அர்ஜூன் திடீர் சந்திப்பு! மங்காத்தா 2 எப்போது?

வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித் மற்றும் அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50-வது படமான இது, பெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் பலரும், தொடர்ந்து, இணையத்தில் கேட்டு வந்தனர். இந்நிலையில், அஜித்தும், அர்ஜூனும் சந்தித்துள்ளனர்.

அப்போது, அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தின் காரணமாக, மாங்காத்தா படத்தின் 2-ஆம் பாகம் தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.