அஜித் – தனுஷ் படம்.. முக்கிய அப்டேட் தந்த பிரபல தயாரிப்பாளர்!

பா.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய திரைப்படங்களை நடிகர் தனுஷ் இயக்கியுள்ளார். இவர், தற்போது இட்லிக் கடை என்ற படத்தை, இயக்கி வருகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு, நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை, அவர் இயக்க இருப்பதாக, தகவல் ஒன்று பரவி வருகிறது. மேலும், இந்த படத்தை, டான் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த தகவல் குறித்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம், கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த அவர், இந்த Project தற்போது பேச்சுவார்த்தையில் தான் உள்ளது. உறுதியான பிறகு தான், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

இதன்மூலம், இந்த தகவல் வதந்தி அல்ல என்றும், பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால், படம் Take Off ஆகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உரிய படமாக இது மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News