தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்றால் அது ஷங்கர் தான். இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படம் தொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் ரோலக்ஸ் மாதிரியான மாஸ் வில்லன் கதாபாத்திரம் படத்தின் இறுதியில் வர உள்ளதாம்.
இந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆலோசனை நடந்து வந்த நிலையில், தற்போது அஜித்திடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அஜித் ஓகே சொல்லிவிட்டால், அந்த படத்தின் பிசினஸ் வேறு லெவலுக்கு சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.