கோலிவுட்டின் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களது நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் வாரிசு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படங்களின், ப்ரீ புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் திரையரங்கு வளாகத்தில் பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டு வைப்பத்தில் போட்ட போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ரசிகர்கள், போஸ்டர் ஒட்டியும், துண்டு உள்ளிட்ட துணிகளை போட்டு இடம்பிடிக்கின்றனர். தற்போது இதனை சுட்டிக்காட்டி அரசியவாதிகளையே முந்திவிட்டீர்கள் என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.