Connect with us

Raj News Tamil

விஜயால் முடியாது.. அஜித்தால் முடியும் – பிரபல இயக்குநர்

சினிமா

விஜயால் முடியாது.. அஜித்தால் முடியும் – பிரபல இயக்குநர்

தமிழ் சினிமாவின் வடதுருவம் -தென் துருவமாக இருப்பவர்கள் அஜித்-விஜய். இவர்கள் இரண்டு பேரின் திரைப்படங்கள் எப்போது வெளியானாலும், திரையரங்குகள் திருவிழா கோலமாக தான் இருக்கும்.

இவர்கள் இரண்டு பேரில், யாரைப் பற்றி எது சொன்னாலும், அது இணையத்தில் வைரலாகி விடுகிறது. இவ்வாறு இருக்க, பிரபல இயக்குநர் அமீர், பேட்டி ஒன்றில், விஜய் மற்றும் அஜித் குறித்து கூறியுள்ளார்.

அதாவது, ஆதிபகவான் திரைப்படம் தோல்வி அடைந்துவிட்டது. ஆனால், அந்த படத்தில், அஜித் நடித்திருந்தால், படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கும். ஏனென்றால், அஜித்தால், இரண்டு விதமான நடிப்பையும் வழங்க முடியும்.

ஆனால், விஜய் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார். அவரால் மாஸ் நடிப்பை மட்டுமே வழங்க முடியும் என்று அமீர் கூறியுள்ளார். இந்த பேட்டி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top