சினிமா
ஸ்காட்லாந்தில் கார் ஓட்டிச் செல்லும் அஜித்.. வைரலாகும் வீடியோ..
அஜித்தின் துணிவு திரைப்படம், கடந்த 11-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியானது. பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்து, பெரும் சாதனையை படைத்தது.
இந்த படத்தை முடித்த கையோடு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலாவிற்கு சென்ற அஜித், கடந்த சில தினங்களுக்கு முன்பு தான், இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அஜித் ஸ்காட்லாந்து நாட்டிற்கு சென்றபோது, ஜாலியாக கார் ஓட்டிச் செல்லும் வீடியோ வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
AK 62 படத்தில் தல அஜித் தற்போது நடிக்க உள்ளார். மகிழ் திருமேணி இயக்க உள்ள இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இன்னும் சில நாட்களில், இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login